» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொள்ளாச்சி விவகாரம் : தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

வியாழன் 14, மார்ச் 2019 6:13:28 PM (IST)



பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கெதிரான கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தமிழகஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மாடசாமி, ராமச்சந்திரன், பெர்சியா, ஸ்டெர்லைட் எதிர்ப்பு  இயக்கம் பாத்திமாபாபு, தெர்மல் ராஜா, மதிமுக நக்கீரன், தொம்மை, சுந்தர்ராஜ், மகராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் பதவியை திரும்ப பெற கோரியும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தனித்தனியே புகார் பெற்று வழக்குப்பதிய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றதும் அதில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ், சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள்,  திரும்பி சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



CSC Computer Education

Joseph Marketing

Anbu Communications

Black Forest Cakes


New Shape Tailors




Thoothukudi Business Directory