» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1லட்சம் அபராதம் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை

புதன் 13, மார்ச் 2019 3:38:20 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்வதோடு ரூ.1இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளுக்குநாள் பெருகிவரும் பிளாஸ்டிக் பயன்பட்டால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், வடிகால் அடைப்பு, மழைநீர் பூமிக்குள் செல்ல இயலாமை போன்ற இயற்கை சீர்கேடுகளும் அவற்றை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுவதோடு பயன்படுத்திவிட்டு தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு நஞ்சான உணவாகி உணவுச்சங்கிலி வழியாக மனிதனை அடைந்து பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகின்றன. 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் 01.01.2019 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கேரிபேக், தாள்உறை, உணவு அருந்தும் மேஐையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தெர்மகோல் தட்டுகள், காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், உறிஞ்சி குழாய்கள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது மேற்படி தடை உத்தரவு தூத்துக்குடி மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இருப்பினும் ஒரு சிலர் சட்ட விரோதமாக மேற்படி தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்த முயற்சிப்பதாக தெரியவருவதை தொடர்ந்து அவற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் பொருட்டு 12.03.2019 மற்றும் 13.03.2019 ஆகிய தேதிகளில் கடற்கரைச் சாலை, மீன் பிடி துறைமுகப் பகுதி, வ.உ.சி.மார்க்கெட், பூமார்க்கெட் ஜெயராஜ் ரோடு, மேற்கு காட்டன் ரோடு, விக்டோரியா சாலை, திருச்செந்தூர் ரோடு, அழகேசபுரம், சேதுபாதை ரோடு ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பிரிவால் 200க்கும் மேற்ப்பட்ட கடைகளில் ஆய்வு மேற்க்கொண்டதில் சுமார் 152கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.18,100 அபராதம் விதிக்கப்பட்டது. 

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தூத்துக்குடி மாநகராட்சி இந்நடவடிக்கை தொடரும் எனவும் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்வதோடு ரூ.1.0இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 14, 2019 - 02:29:41 PM | Posted IP 162.1*****

அது சரி... முதல்ல பிளாஸ்டிக் கம்பெனியை தடை செய்யுங்க புண்ணியமா போகும் ..

துடியன்Mar 13, 2019 - 07:17:03 PM | Posted IP 172.6*****

பரவாயில்லை

தூத்துகுடியன்Mar 13, 2019 - 06:38:24 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் தடை செய்பட்ட அணைத்து பொருட்களும் கிடைக்கிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications


Joseph Marketing


New Shape Tailors

Thoothukudi Business Directory