» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகன ஓட்டிகள் கவனத்தை மாற்றும் விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டுகள்

புதன் 13, மார்ச் 2019 12:45:27 PM (IST)
தூத்துக்குடியில் வாகனஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்த 2019 ம் ஆண்டு தேர்தல் தேதி கடந்த ஞாயிற்றுகிழமை அறிவிக்கப்பட்டது. அது முதலே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, பறக்கும்படை சார்பில் வாகன சோதனை என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி திருநெல்வேலி 4 வழிச்சாலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள பாலத்தின் மேலே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா அழைக்கவும் 1950 என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நீண்ட பிளக்ஸ் பேனர் கட்டப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் பாலத்தில் இவ்வாறு பிளக்ஸ்போர்டு வைத்திருப்பது பொதுமக்கள்,வாகனஓட்டிகள் கவனத்தை திசை திருப்புவதாக அவ்வழியே சென்றவர்கள் கூறினர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்ட போது அந்த பிளக்ஸ் பேனரை போட்டோ எடுத்து அனுப்பும்படியும் அதை பார்த்த பின்பு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.    


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

New Shape Tailors

Black Forest CakesNalam Pasumaiyagam


CSC Computer Education

Joseph Marketing
Thoothukudi Business Directory