» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைக் கண்டித்து வஉசி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

புதன் 13, மார்ச் 2019 10:23:36 AM (IST)பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவ, மாணவியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் வஉசி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  எஸ்.எப்.ஐ. மாவட்ட தலைவர் கார்த்தி்க், மாவட்ட செயலளார் மாரிசெல்வம் ஆகியோர் தலைமையில் 1300 மாணவ, மாணவிகள் பங்கேற்று குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஜீவன்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், இந்த சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


மக்கள் கருத்து

நிஹாMar 13, 2019 - 03:35:22 PM | Posted IP 162.1*****

பாராட்ட வேண்டிய செயல். இதே போல தேசிய ஊடகங்களின் பாரபட்சமான செயல்பாட்டையும் கண்டித்து போராட வேண்டும்.

DhinakaranMar 13, 2019 - 12:50:45 PM | Posted IP 162.1*****

காங்கிரதுலேஷன்ஸ் மீ டியர் பாய்ஸ் அண்ட் கிரல்ஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Joseph MarketingAnbu CommunicationsNalam Pasumaiyagam

New Shape TailorsThoothukudi Business Directory