» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

செவ்வாய் 12, மார்ச் 2019 5:45:19 PM (IST)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் நடத்தை விதிமீறல்களை தெரிவிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் தொடர்பான விதிமீறல்களை மேற்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள இலவச தொலைபேசி எண் 1800-425-8541 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் சந்தூரி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

annIMar 13, 2019 - 10:46:34 AM | Posted IP 162.1*****

HA HA HA

தமிழ்ச்செல்வன்Mar 12, 2019 - 07:17:18 PM | Posted IP 172.6*****

அட அய்யா! நீங்க காசு கொடுக்குறதுக்கு துணை போற மாதிரி தெரியுது. அந்த நம்பருக்கு பேசுனா ஹிந்தி அல்லது இங்கிலீஸ்ல பேசுவான். தூத்துக்குடிக்கு லோக்கல் நம்பரை கொடுங்க. அல்லது எக்கேடும் கேட்டு போங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Joseph Marketing

New Shape Tailors

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory