» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொய்யான வாட்ஸ்அப் தகவல்களை நம்பவேண்டாம் : கீதாஜீவன் எம்எல்ஏ வேண்டுகோள்

ஞாயிறு 10, மார்ச் 2019 4:35:49 PM (IST)

வாட்ஸ்அப்பில் பரவும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  நான் தி.மு.க. குடும்பத்தைச் சார்ந்தவள். என் தந்தையார் என்.பெரியசாமி அவர்கள் சாதி, மதம் பார்க்காமல் தி.மு.க கொள்கைகளை மட்டுமே பின்பற்றி அரசியலில் இருந்து வந்தார்கள்.  சிறுவயது முதல் நானும் எனது குடும்பத்தாரும்; சாதி மத உணர்வு இல்லாமல் அனைத்து சமுதாயத்தினரிடமும் சகோதர, சகோதரியாகத்  தான் பழகி  வருகிறோம்.

தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 7 பிரிவு சாதிகளை ஒருங்கிணைத்து  தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க 02.02.2011ல் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அரசுக்கு ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்தார். அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தி.மு.கழக தலைவர்; தளபதியார் அவர்கள் ஊராட்சி கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் பெண்ணின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது கழக ஆட்சி ஏற்பட்டவுடன் தேவேந்திர குல வேளாளர் மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையை பரீசிலிப்பதாக பதில் அளித்தார். அதனை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக சில சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது 

எதிர்க்கருத்தை தொலைபேசியில் என்னிடம் பேசினார்கள். என்னுடைய பல தொலைபேசி உரையாடல்களை திரித்து (Edit செய்து) பொய்யான வாட்ஸ்அப் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இந்த பொய்யான வாட்ஸ்அப் தகவல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.ஒரு பெண்ணாகிய எனக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படுத்திடவும், தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்  விதமாகவும், தி.மு.க. தலைமையிடம் கெட்டப் பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்றும் தொடர்ந்து சதி செய்யப்பட்டு வருகிறது. என்றைக்கும் நான் தமிழன தலைவர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர் தளபதியார் வழியிலே சாதி சமய உனர்வுகளை கடந்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிMar 12, 2019 - 06:54:37 PM | Posted IP 172.6*****

ஸ்டெர்லிட் பின்புலம் யார் என்று எல்லாரும் அறிவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

New Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Joseph Marketing
Thoothukudi Business Directory