» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திங்கள் 18, பிப்ரவரி 2019 10:49:32 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவை சேர்த்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அனுமதியில்லை என்பதால், ஆலையை திறக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெளி மாவட்ட போலீசார்களும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

தூத்துகுடிகாரன்Feb 18, 2019 - 09:31:43 PM | Posted IP 162.1*****

ஏல நம்ம "சாமி" எங்க ...

சாமான்யன்Feb 18, 2019 - 02:48:41 PM | Posted IP 172.6*****

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நினைத்தாலே திறக்க முடியாது! அரசு சீல் வைத்த கம்பெனியை அரசு குளம் தூர்வார போன்ற சமூகப்பணி(?) களுக்கு அனுமதிக்கிறது!

நிஹாFeb 18, 2019 - 12:47:36 PM | Posted IP 162.1*****

இது இறுதி முடிவில்லை. தீர்ப்பின் படி, பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத்தான் தடை. ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்கவும். எப்படியோ வைக்கோவுக்கும் நன்றி.

ஒருவன்Feb 18, 2019 - 11:21:34 AM | Posted IP 162.1*****

டூட்டி ஆன்லைன் அவர்களே ... நல்ல தீர்ப்பு தான் . ஏன் பரபரப்பு தீர்ப்பு னு தலைப்பு வசிடீங்க ??

Sterlite should not openFeb 18, 2019 - 11:20:37 AM | Posted IP 162.1*****

Kumar

AlexFeb 18, 2019 - 11:19:54 AM | Posted IP 162.1*****

Correct judgement

AnanthFeb 18, 2019 - 11:19:19 AM | Posted IP 162.1*****

Good

தமிழன்Feb 18, 2019 - 11:14:41 AM | Posted IP 162.1*****

நிரந்தரமாக மூடப்படுமா! இல்லை தேர்தலுக்கு பின் திறக்க படுமா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Joseph MarketingNalam Pasumaiyagam


New Shape Tailors

Anbu CommunicationsThoothukudi Business Directory