» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி வீதி உலா : திரளான பக்தர்கள் தரிசனம்

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:17:09 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா 8ம் திருவிழாவான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், மாலையில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 

இத்திருவிழாவின் 8ம் நாளான இன்று அதிகாலை சுவாமி சண்முகர் வெங்குபாஷா மண்டப்பத்திலிருந்து வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தார். அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 11.35 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. அப்போது திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டு, மரிக்கொழுந்து மாலை, பன்னீர் ஆகியவை திருக்கண் சாத்தி வழிப்பட்டனர்.

திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) செந்தில்குமார், கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணியம் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ம் திருவிழாவை முன்னிட்டு 19ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிகரக்கணக்கான பக்தர்கள் கலந்து வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். மாசி திருவிழா 11ம் திருவிழாவை(20ம் தேதி) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


New Shape Tailors

Joseph Marketing

Black Forest CakesAnbu Communications


CSC Computer EducationThoothukudi Business Directory