» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் அடர்ந்த காடுகள் திட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:11:55 PM (IST)



தூத்துக்குடி பசும்பொன் நகர் பகுதியில் அடர்ந்த காடுகள் (Thick Forestவ) அமைக்கும் திட்டத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பூங்காவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான திறவிடங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பசும்பொன் நகர் பகுதியில் உள்ள பூங்கா இடத்தில் பல்வேறு வகையான 2500 மரங்களை நட்டு அடர்ந்த காடுகள் (Thick Forestவ) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மரம் நடும் பணியினை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி ஆட்சியர்(பயிற்சி), மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் 250க்கும் மேற்பட்ட சமூக நலனில் அக்கறை கொண்ட தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்திரளாக கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education


New Shape Tailors


Nalam Pasumaiyagam


Joseph Marketing



Thoothukudi Business Directory