» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காஷ்மீரில் பலியான வீரர்களுக்கு திருச்செந்தூரில் அஞ்சலி

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 8:06:21 PM (IST)காஷ்மீரில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு திருச்செந்தூர் செந்தூர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

காஷ்மீரில் இந்திய துணை ராணுவம் சென்ற வாகனம் மீது தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுப்பிரமணியன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 40 வீரர்களுக்கும் திருச்செந்தூர் செந்தூர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு உயிரிழந்த வீரர் உருவபடம் அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த படத்திற்கு செந்தூர் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் செந்தூர் நலச்சங்க தலைவர் ஜோசப், செயலாளர் நம்பி, பொருளாளர் ஐயப்பன், கௌரவ ஆலோசகர் வக்கீல் கண்ணன், வேல்முருகன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழ்செல்வன், துரைராஜ், தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ச.ம.க., ஒன்றிய செயலாளர் சோடா ரவி, ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் சாந்தகுமார், மேலதிருச்செந்தூர் விவசாய சங்க செயலாளர் முத்துசெல்வன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் காமராஜ், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், செந்தூர் அனைத்து வியபாரிகள் சங்க துணைத்தலைவர் கார்க்கி, எட்வர்ட், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் என்ற ஆதிபுத்திரன், சிறுத்தை சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Joseph Marketing

CSC Computer Education
New Shape Tailors

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory