» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு

ஞாயிறு 17, பிப்ரவரி 2019 7:45:43 PM (IST)



தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படவுள்ள அரசினர் பொறியியல் கல்லூரியை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, இன்று ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் வைக்கப்படும் காப்பு அறைகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் உடன் இருந்தார்.   

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வரும் பகுதி, அலுவலர்கள் வந்து செல்லும் பகுதி, காப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்து வரும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், தேர்தல் வட்டாட்சியர் நம்பிராயர், தேர்தல் துணை வட்டாட்சியர் முரளி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




New Shape Tailors

CSC Computer Education

Joseph Marketing

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory