» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் வெட்டி வேர்ச்சப்பரத்தில் சண்முகர் உலா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சனி 16, பிப்ரவரி 2019 11:31:37 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா ஏழாம் நாளன்று இன்று காலையில் சண்முகர் தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏழாம் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. 

மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏழாம் திருவிழாவன்று சுவாமி ஏற்ற தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலில் அதிகாலை முதலே குவிந்தனர் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, சூரிய காவடி எடுத்தும் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். 10-ஆம் நாளான 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Anbu CommunicationsNew Shape Tailors

Nalam PasumaiyagamJoseph MarketingThoothukudi Business Directory