» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி : தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு

சனி 16, பிப்ரவரி 2019 11:17:25 AM (IST)



புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே  ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி, ஜேசிஐ பியர்ல்சிட்டி, நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் ஸ்னோஸ் ஆகிய அமைப்புகளின சா்பில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியனின் புகைப்படத்திற்கு வணிகர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலையில், டவுண் டிஎஸ்பி பிரகாஷ் மெழுகுவர்த்தி எற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை  தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள் அன்னை தங்கம் ராஜலிங்கம், தெர்மல் ராஜா, ரேட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி தலைவர் கண்ணன், செயலாளர் செந்தில் ஆறுமுகம், ஜேசிஐ செயலளார் வில்சன், உறுப்பினர்கள் முத்துராமன், இளங்கோவன், லயன்ஸ் கிளப் ஆப் ஸ்னோஸ் தலைவர் தர்மன் டிரோஸ், மண்டலத் தலைவர் திருவடி, பிரெண்ஸ் ஆப் ஷிப்பிங் நிர்வாகிகள் செந்தில் வீரபாகு, சங்கர், கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing




Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory