» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரேஷன் கடை விற்பனையாளர் பணி : தேர்வானவர்கள் விவரம் வெளியீடு

சனி 16, பிப்ரவரி 2019 8:26:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்வானவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்புப் பணி நிலைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் துணைப் பதிவாளரான பெ. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப 24.01.2018 முதல் 03.02. 2018 வரை நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இதில், 4678 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்பட்ட தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் அனைத்தும் தேர்வுக்காக விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்ட அனைத்து மையங்களின் அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam





New Shape Tailors



Thoothukudi Business Directory