» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை: 4பேர் கைது

சனி 16, பிப்ரவரி 2019 8:24:04 AM (IST)

கோவில்பட்டி  அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவில்பட்டி, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் போ லீசார் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மயானம் அருகே நின்றிருந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனையிட்டதில், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததாம். 

விசாரணையில், கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் 4ஆவது தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சங்கரன்(55), காந்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் கற்பகபிரகாஷ்(24), அவரது சகோதரர் கற்பகராஜ்(22) மற்றும் வடக்கு புதுக்கிராமத்தைச் சேர்ந்த கோமதி பாண்டியன் மகன் செண்பகராஜ்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போ லீசார், அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications


Joseph Marketing

Thoothukudi Business Directory