» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

சனி 16, பிப்ரவரி 2019 8:21:44 AM (IST)

காப்பீட்டுக் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோக்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்; ஆண்டுதோறும் உயர்த்தும் காப்பீட்டுக் கட்டண முறையை கைவிட வேண்டும்; விபத்து காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகைக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கொம்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம். முருகன், சிஐடியூ நிர்வாகிகள் ஆறுமுகம், சங்கரன், நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors




Joseph Marketing

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory