» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: சோகத்தில் கிராமம்.. உருக்கமான தகவல்கள்!

வெள்ளி 15, பிப்ரவரி 2019 4:44:37 PM (IST)

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் சவலாபேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் உயிரிழந்த தகவலையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (28). ஐடிஐ வரை படித்துள்ள சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். போலீசில் சேர்ந்தார். உத்திர பிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி, என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து மதியம் வரை அவரது வீட்டினர் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்த நிலையில் தமிழக அரசு சுப்பிரமணியன் உயிரிழந்தை உறுதி படுத்தியதை தொடர்ந்து அக்கிராம சோகத்தில் மூழ்கி உள்ளது. உயிருடன் இருக்கலாம் என்று நம்பியிருந்த அவரது பெற்றோர், மனைவி, உறவினர்கள் மரணம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கதறி அழுதனர். 

கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ், கயத்தார் தாசில்தார் லிங்கராஜ் ஆகியோர் நேரில் வந்து சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். அவருக்கு இந்தாண்டு தலைப்பொங்கல் என்பதால் விடுமுறையில் ஊருக்க வந்துள்ளார். தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் தலைப்பொங்கல் கொண்டாடடியது மட்டுமின்றி, அவரது தந்தை கணபதிக்கு கண் அறுவை சிகிச்சையும் மருத்துவமனையில் சேர்த்து பார்த்து உள்ளார். தந்தை மருத்துவமனையில் இருந்தால் விவசாய பணிகளையும் ஆர்வமுடன் செய்துள்ளார். அவரது தந்தை கணபதி கூறுகையில் "எப்போதும் போலீசில் சேர வேண்டும், இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அவனுடைய விருப்பம், அதைபோன்று பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்று கிழமை தான் வேலைக்கு செல்வதாககூறி விட்டு சென்றார் என்றார்.அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கூறுகையில் "நேற்று மதியம் தொலைப்பேசியில் தொடர்பு கேட்டு அவரது நலம், குடும்பத்தினர் நலம் குறித்து கேட்டது மட்டுமின்றி, உடல்நிலையை நன்றாக பார்த்து கொள்ளமாறு தெரிவித்துள்ளார், தற்போது காண்வாய்யில் செல்வதால் பின்னர் அழைப்பதாகதெரிவித்துள்ளார்.அதன் பின்பு அழைக்கவும் இல்லை, இவர் தொடர்பு கொண்ட போதும் போன் எடுக்கவில்லை என்றார் கவலை தேய்ந்த முகத்துடன்.

இந்த கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் கூறுகையில் "எப்பொழும் நாட்டுபற்றுடன் இருப்பவர் சுப்பிரமணியன், எல்லா இளைஞர்களும் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமின்றி, அதற்கான வழிமுறைகள் கூறி ஊக்கப்படுத்துவர் என்றும், மேலும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டும் என்று தெரிவிப்பது மட்டும் தற்பொழுது பொங்கலுக்கு வந்தார், ஊரில் விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்து இளைஞர்கள், சிறுவர்களை ஊக்கப்படுத்தியதாகவும், அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு" என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சுப்பிரமணியம் ஆரம்ப பள்ளி பயின்ற அந்த கிராமத்தில் உள்ள டி.என்.டி.டி.ஏ. ஆரம்ப பள்ளியில் அரவது மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  சுப்பிரமணியக்கு பாடம் எடுத்த அப்பள்ளி ஆசிரியை சுசிலா கூறுகையில் "அவருடைய மரணம் செய்தி கேட்டத்தில் இருந்தது. தான் 2ம்வகுப்பில் அவருக்கு பாடம் எடுத்த போது இருந்த முகம் தான் ஞாபகத்தில் இருப்பதாகவும், எப்பொழுது வகுப்பில் துறுதுறுவென்று இருப்பார்., வேலையில் சேர்ந்த பொழுதும் தன்னை வழியில் பார்க்கும் போது வணக்கம் செலுத்துவார், அவர் மரண செய்தி கேட்டதில் இருந்து தனக்கு உணவு உண்ண கூட மனம் வரவில்லை" என்றார்.  வீட்டிற்கு நல்ல மகனாகவும், நாட்டிற்கு நல்ல பாதுகாவலனாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த சுப்பிரமணியன் மறைவு இப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ராகவேந்திராFeb 16, 2019 - 12:29:33 AM | Posted IP 172.6*****

நேருக்கு நேராக எதிர்த்து சண்டை சண்டை போட தகுதியில்லாத கோழைகளே!! பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை அழிக்க! இந்தியன் இந்துஸ்தான் என்ற முறையில் பாரத் மாதா கி ஜே என்று வீர முழக்கமிட்டு உன்னை அளித்தே தீருவோம் வந்தே மாதரம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors


Joseph Marketing

CSC Computer EducationAnbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory