» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்வு நேரத்தில் இடமாற்றம்: போலீஸ் எஸ்.ஐ.,க்கள் குமுறல்

வெள்ளி 15, பிப்ரவரி 2019 11:20:34 AM (IST)

குழந்தைகளின் தேர்வு நேரத்தில் பணியிட மாற்ற உத்தரவு, தூத்துக்குடி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றும் செய்யப்பட்டுள்ளனர். 

தற்போது குழநதைகளின் தேர்வு நேரம் நெருங்குகிறது. இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் குமுறுகின்றனர். போதிய கால அவகாசம் இன்றி இந்த இடமாறுதல் உத்தரவால் தங்களது குழந்தைகளுக்கு புதிய பள்ளியை தேட வேண்டும், குடும்பத்தினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் பொதுத் தேர்வு எழுதும் தங்களது குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவதாக காவல்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

balachandraboopathyFeb 15, 2019 - 04:22:44 PM | Posted IP 162.1*****

24 hrs டூட்டி , நாட்டின் மக்களுக்காக பணியை செய்யேவேண்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Anbu Communications





Joseph Marketing

CSC Computer Education



Thoothukudi Business Directory