» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீவிரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்ட வீரர் பலி? உறுதியான தகவல் இன்றி தந்தை குழப்பம்!!

வெள்ளி 15, பிப்ரவரி 2019 10:12:33 AM (IST)

காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாபேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்ரமணியன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் தனது மகன் இறந்தது குறித்து எந்த தகவலும், தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், உறுதியான தகவல் தெரியாத காரணத்தினால் குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்துவதற்காக கூற வேண்டும் என்று, செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியனின் தந்தை கணபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியை சேர்ந்த கணபதி என்பது மகன் சுப்பிரமணியன்(28). ஐடிஐ படித்துள்ள சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். போலீசில் சேர்ந்தார். உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி, என்ற மனைவி உள்ளார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.குழந்தைகளை இல்லை. 

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதி படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரமணி தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்


மக்கள் கருத்து

இந்தியன்Feb 15, 2019 - 04:05:02 PM | Posted IP 162.1*****

அப்படி ஒன்றும் இருக்காது கடவுள் காப்பாத்துவார்

தமிழன்Feb 15, 2019 - 02:04:04 PM | Posted IP 162.1*****

ஆழ்ந்த இரங்கல்

ஒருவன்Feb 15, 2019 - 12:13:57 PM | Posted IP 162.1*****

ஆழ்ந்த இரங்கல் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory