» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைகளை பறித்துக் கெண்ட மனைவியின் குடும்பத்தார் : பார்வையற்ற இளைஞர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

வெள்ளி 15, பிப்ரவரி 2019 8:42:20 AM (IST)

மனைவியின் குடும்பத்தார் தனது நகைகளை பறித்துக்கொண்டதாக, பார்வையற்ற இளைஞர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் அருகேயுள்ள ரோஜாபாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். பார்வையற்றவரான இவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு விவரம்: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனக்கும், வேம்பார் கீழத்தெருவைச் சேர்ந்த மோனிஷா என்பவருக்கும் கடந்த மாதம் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பிறகுதான், மோனிஷாவுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றதாக தெரியவந்தது.
 
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மோனிஷாவின் குடும்பத்தார் என்னை மிரட்டி, 3 பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு நியாயம்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Joseph Marketing
Thoothukudi Business Directory