» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் வசதி கோரி பெண்கள் மறியல்

வெள்ளி 15, பிப்ரவரி 2019 8:30:16 AM (IST)

குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, தூத்துக்குடியில் பெண்கள் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி நேற்று திடீரென அண்ணாநகர் 12ஆவது தெரு சந்திப்பு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார், வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர். தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதிக்கு 4 ஆவது பைப்- லைன் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 18 ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்தியதாகவும், இதுவரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Joseph Marketing

Black Forest Cakes
New Shape Tailors


CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory