» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட்சிட்டி பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா : வரும் 16ம் தேதி நடக்கிறது.

வியாழன் 14, பிப்ரவரி 2019 7:37:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீர்மிகு நகர திட்டங்கள் மத்திய அரசால் ஜூன் 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியானது 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீர்மிகு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டது.அபிவிருத்தி செய்தல், நகர மறுவளர்ச்சி திட்டம் பசுமைப்பகுதி மேம்படுத்துதல் மற்றும் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வசதிகளை உள்ளடக்கிய பணிகள் சீர்மிகு நகர திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இத்திட்டமானது மத்திய, மாநில அரசுகள் பங்குத் தொகையாக தலா 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மேற்படி திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டுள்ளது.
 
தூத்துக்குடி மாநகராட்சியைப் பொறுத்தமட்டில் சாலை மேம்பாடு, பேருந்து நிலையம் மேம்படுத்துதல் பூங்காக்கள் மேம்படுத்துதல், மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், தெருவிளக்குகளை மின் ஆற்றல் சேமிப்பு விளக்குகளாக மாற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால்கள் அபிவிருத்தி போன்ற 41 பணிகள் ரூ.989.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரூபாய்.294.49 கோடிக்கான பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது. மேற்படி சீர்மிகு நகர திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப் 16ம் தேதி சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆண்டாள் தெருவில் அமைந்துள்ள அபிராமி மஹாலில் வைத்து நடைபெறவுள்ளது. 

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையேற்கிறார், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாநகராட்சிக்கான சீர்மிகு நகர திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி விழாவில் பேருரை யாற்ற உள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாநகரின் மக்கள் நலன் கருதி தயார் செய்யப்பட்டுள்ள சீர்மிகு நகரப் பணிகளுக்கான திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், தெரிவித்தார்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 15, 2019 - 02:06:46 PM | Posted IP 162.1*****

முத்துநகர் கடற்கரை மாநகராட்சி எடுத்து நடத்த வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors


Anbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer EducationBlack Forest CakesThoothukudi Business Directory