» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டி: தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வியாழன் 14, பிப்ரவரி 2019 4:17:28 PM (IST)விவசாயிகளின் வாக்கு விவசாயிக்கே என்பதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் போட்டியிட உள்ளதாக கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டி அருகே உள்ள படர்ந்தபுளி பிர்காவிற்கு உட்பட்ட 16 கிராமங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் அரசு காலதாமதம் செய்து வருவதைக் கண்டித்தும், உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதன் பின்பு தமிழ் விவசாய சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி செய்திகளிடம் பேசுகையில் "படைப்புழு தாக்கத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 7410 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அரசு அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அந்த நிவாரண தொகை வந்து சேரவில்லை. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக படர்ந்தபுளி பிர்காவில் மக்காச்சோள பயிருக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிர ரூபாய் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தொடர்ந்து வாக்களித்து அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதால் விவசாயிகள் வாக்கு விவசாயிகளுக்கு தான் என்ற அடிப்படையில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் விவசாயிகளை  நிறுத்தி போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சீமான் தம்பிFeb 14, 2019 - 05:05:53 PM | Posted IP 162.1*****

ஆளாளுக்கு இப்படி election ல நின்றால் எப்படி ? விவசாயத்துக்கு அரசு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தருவதாயில்லை. அதை வீழ்த்த சீமானுடன் கைகோருங்கள். யாருக்குமே யாருமே பேசாத இன்றய தமிழகத்தின் உண்மை நிலைமையை புட்டு புட்டு வைக்கிறார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Anbu Communications


Black Forest Cakes

New Shape Tailors

CSC Computer EducationNalam PasumaiyagamThoothukudi Business Directory