» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்

வியாழன் 14, பிப்ரவரி 2019 3:57:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3,000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. குறைந்தபட்ச தகுதி: 

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு. இப்போட்டிகளில் முதலிடம்/ இரண்டாமிடம் /மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

2. தகுதியான விளையாட்டுப் போட்டிகள்
  • மைய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள்
  • அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள்
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச /தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
  • மைய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
3. 2018 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்

4. விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-க்கு (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) மிகாமல் இருத்தல் வேண்டும்.

5. மைய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மைய அரசு/மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

6. முதியோருக்கான (Veteran / Masters sports meet) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் தங்களது பதிவேற்றத்தினை 21.02.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விளக்கத்தினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Joseph Marketing


Nalam Pasumaiyagam

CSC Computer Education


New Shape Tailors

Black Forest CakesThoothukudi Business Directory