» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்றுக் குட்டியோடு 3 மாடுகள் திருட்டு: 2 பேர் கைது

வியாழன் 14, பிப்ரவரி 2019 11:47:55 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே 3 மாடுகளுடன் ஒரு கன்றுக்குட்டியைத் திருடிச் சென்ற 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவர்மீரான் (48). இவர், சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விட்டிருந்த அவரது 3 மாடுகளும், ஒரு கன்றுக்குட்டியும் காணாமல் போனது. 

இதுகுறித்து அவர் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தேவர்மீரான் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டடர் சிவலிங்கபெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அழகிய மணவாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த உலகுமுத்து மகன் ஊமத்துரை, நகாப்பன் மகன் மந்திரம் (36) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மாடுகளும் கன்றுக்குட்டியும் மீட்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes

Joseph Marketing

Anbu CommunicationsNew Shape TailorsThoothukudi Business Directory