» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 20 நாளில் கூடுதல் வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்திய கணவர் உட்பட 4பேர் வழக்கு

வியாழன் 14, பிப்ரவரி 2019 11:35:51 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே திருமணமான 20 நாளில் கூடுதல் வரதட்சனை கேட்டு இளம் பெண்ணை துன்புறுத்திய கணவர் உட்பட 4பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நெல்லை, சங்கர் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் சாரத பிரியதர்ஷினி (24), இவருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமகன் செல்வகுமார் (29) என்பவருக்கும் கடந்த 26.08.2018-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகையும், ரூ.55ஆயிரம் ரொக்கமும், ரூ.2லட்சம் மதிப்புள்ள சீதனப் பொருட்களையும் பெண் வீட்டார் வரதட்சனையாக வழங்கியுள்ளனர். 

இந்நிலையில், திருமணமான 20 நாட்களுக்குப் பின்னர் செல்வகுமார், மற்றும் அவரது தாயார் கலாராணி, அண்ணன் கார்த்திக், அவரது மனைவி மரகத செல்வி ஆகியோர் சாரத பிரியதர்ஷினியை கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளார். மேலும், அவரை தந்தை வீட்டிற்கு அவரை விட்டியடித்து விட்டார்களாம். உறவினர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாஷி செல்வகுமார் உட்பட 4பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsJoseph Marketing


Nalam Pasumaiyagam


CSC Computer Education

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory