» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ் மோதி விபத்து: கல்லூரி ஊழியர் பரிதாப சாவு

வியாழன் 14, பிப்ரவரி 2019 11:22:18 AM (IST)

வல்லநாடு அருகே அரசு பஸ் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு வேளான் கல்லூரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் வீரபுத்திரன் (49). இவர் கிள்ளிகுளம் அரசு வேளாண் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று தனது மோட்டார் சைக்களிில் வல்லநாடு பாலத்தின் அருகே சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த வீரபுத்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பஸ் டிரைவர், நெல்லை மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அந்தோணி மகன் சூசையப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த வீரபுத்திரனுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் மும்பையில் வேலைபார்த்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Anbu Communications



CSC Computer Education



Thoothukudi Business Directory