» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடகள விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி பாராட்டு!!

வியாழன் 14, பிப்ரவரி 2019 10:15:22 AM (IST)



அகில இந்திய காதுகேளாதோருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடி மாணவி  பிரீத்தி சிவா பிச்சம்மாள் 2 தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய காதுகேளாதோருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரீத்தி சிவா பிச்சம்மாள் 9.7 1 மீட்டர் தூரம் குண்டு எறிந்து புதிய சாதனை படைத்து முதல் பரிசான தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் கடந்த 83 வருடங்களாக முடிக்கப்படாமலிருந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இவர் 16 வயதுக்குட்பட்ட ஜூனியர் மகளிர் பிரிவிற்கான வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து மற்றொரு தேசிய சாதனை படைத்துள்ளார்.

இவர் 25.40 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 36 வருட சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் இரண்டு தங்கப் பதக்கங்களை தமிழகத்திற்காக பெற்று தந்து பெருமை தேடித் தந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த அவர், இதைத்தொடர்ந்து அடுத்து நடைபெறும் அகில இந்திய போட்டியில் மாணவி  பிரீத்தி சிவா பிச்சம்மாள் வெற்றிப்பெற வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். அவருடன் தந்தை இராகவானந்தம், பயிற்சியாளர் சாம் மற்றும் தலைமையாசிரியர் டீடவிட் ஜெயசேகர், தூத்துக்குடி காது கேளாதோர் நலச்சங்க தலைவர் மெய்கண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors


Black Forest Cakes

Joseph Marketing




CSC Computer Education

Anbu Communications



Thoothukudi Business Directory