» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை பணியாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

வியாழன் 14, பிப்ரவரி 2019 10:13:34 AM (IST)



41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசு ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட  6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் பரணிதரன் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். வணிகவரி மாநில பொதுச் செயலாளர் முருகன், கால்நடை ஆய்வாளர் சங்கம் மனோகரன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாநிலச் செயலாளர் கிளட்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசு ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி அரசு பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் திருமலை நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes





Anbu Communications

CSC Computer Education



Thoothukudi Business Directory