» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 16ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்கிறார்

வியாழன் 14, பிப்ரவரி 2019 9:01:44 AM (IST)

தூத்துக்குடியில் வருகிற 16ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகிக்கின்றனர். 

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்கிறார். இதில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசுகிறார். மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் நன்றி கூறுகிறார்.கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest CakesJoseph Marketing
Thoothukudi Business Directory