» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரும்புக் கடையை உடைத்து பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 14, பிப்ரவரி 2019 8:25:56 AM (IST)

திருச்செந்தூரில் இரும்புக் கடையை உடைத்து ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் சாலையில் வசித்து வருபவர் ஆறுமுகபாண்டி (42). இவர் அப்பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்கச் சென்றபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 12 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Joseph Marketing




Thoothukudi Business Directory