» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி சுவரில் தத்ரூபமாக வரையப்பட்ட ரயில் ஓவியம் : பொதுமக்கள் வியப்பு

புதன் 13, பிப்ரவரி 2019 8:09:07 PM (IST)




சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளம் பள்ளி சுவற்றில் வரையப்பட்ட ரயில் ஓவியம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மீரான்குளம் ஊராட்சி தேர்கன்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ5.75 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவரில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஓவியர் சிங்கராஜ் வர்ணம் மற்றும் ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். அதில் 20 மீட்டர் நீளமுள்ள பள்ளி சுவற்றில் ரயில் செல்வது போல் ஓவியம் வரைந்துள்ளார். 

அந்த ரயிலில் பேய்க்குளம் , தேர்க்கன்குளம் என பெயரிட்டு மாணவர்கள் பயணிப்பது போல் ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியம் நிஜ ரயில் போல் அமைந்துள்ளதால் கிராம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தூரத்தில் இருந்து இதனை கவனிக்கும் போது நிஜ ரயில் செல்வது போல் அமைந்துள்ளது. இதனை அந்த பகுதியை கடப்பவர்களும், கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



New Shape Tailors


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Joseph Marketing



Thoothukudi Business Directory