» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களவைத் தேர்தலுக்கான வீடியோ கேமரா வாடகை : விலைப்புள்ளி கோருதல் தொடர்பாக ஆட்சியர் அறிவிப்பு

புதன் 13, பிப்ரவரி 2019 4:00:32 PM (IST)

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 நடைபெற உள்ளதை முன்னிட்டு வீடியோ கேமராவிற்கான வாடகை விவரம் தொடர்பான விலைப்புள்ளி கோருதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் வீடியோ கிராபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே வீடியோகிராபர்கள் வீடியோ கேமராவுடனான வாடகை விவரங்களை இறுதி செய்யும் பொருட்டு விலைப்புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான படிவங்களை www.tenders.tn.gov.in மற்றும் www.thoothukudi.nic.in ஆகிய இணையதளங்களில் வரும் 14.02.2019 முதல் 22.02.2019 பிற்பகல் 3 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் படிவங்களை வரும் 22.02.2019 அன்று மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களின் அறையில் உள்ள மூடி முத்திரையிடப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட வேண்டும். 22.02.2019 அன்று 3 மணிக்கு பிறகு வரும் டெண்டர் படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  22.02.2019 அன்று மாலை 3.30 மணிக்கு பெட்டி திறக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019 தொடர்பான வீடியோ கிராபர்கள் முடிவு செய்யப்படுவார்கள் இது தொடர்பான முன்னோடி கூட்டம் 18.02.2019 மாலை 04.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Joseph Marketing


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory