» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் டெப்போவை மூட எதிர்ப்பு : கடைகள் அடைப்பு

புதன் 13, பிப்ரவரி 2019 7:55:01 AM (IST)



சாத்தான்குளத்தில் உள்ள பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அரசு பஸ் டெப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்து கடந்த 2017-ம் ஆண்டு டெப்போ திறக்கப்பட்டது. நெல்லை, திருச்செந்தூர், திசையன்விளை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இந்த டெப்போவுக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு எளிதில் போக்குவரத்து சேவை கிடைத்து வந்தது.

இந்நிலையில் டெப்போவில் பஸ்களுக்கு வழங்கப்படும் டீசல் வசதி நிறுத்தப்பட்டதால், டெப்போவில் இயங்கிய 6 பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது டெப்போவை மூடிவிட்டு, அங்கு வந்து செல்லும் அரசு பஸ்களை திருச்செந்தூர் அல்லது திசையன்விளையில் உள்ள பஸ் டெப்போவிற்கு வந்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து சாத்தான்குளம் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி சாத்தான்குளம் பஜார் பகுதிகளில் நேற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. 

ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு வியாபாரிகள், பொதுமக்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 3பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோசப், அனைத்து மக்கள் நல அமைப்பின் பொறுப்பாளர் மகா பால்துரை, வர்த்தக சங்க தலைவர் துரைராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், டிஎஸ்பி பாலசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், திருச்செந்தூர் கோட்டாட்சியர் இடமாறுதல் பெற்றுள்ளார். எனவே புதிய கோட்டாட்சியர் வந்ததும், வருகிற 20-ம் தேதிக்குள் சமாதான கூட்டம் நடத்தப்படும். அதில் பஸ் டெப்போவை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes



Joseph Marketing


New Shape Tailors




Thoothukudi Business Directory