» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்து : 2 மாணவர்கள், ஆசிரியை காயம்

செவ்வாய் 12, பிப்ரவரி 2019 4:29:05 PM (IST)



தூத்துக்குடி அருகே இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் மற்றும், தனியார் பள்ளி ஆசிரியை ஆகிய 3பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா பென்சிகர். ஆட்டோ டிரைவர். இன்று காலை பள்ளி குழந்தைகளை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்றார். புதுக்கோட்டை அருகே வாகைகுளம் மங்களகிரி விலக்கில் வளைவில் திரும்பும்போது நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் வந்த பள்ளி குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி அலறினர். 

இதில் தூத்துக்குடி தனியார் பள்ளி மாணவர்கள் கபிரேயல்(12), டேனியல்(10) மற்றும் மாணவரின் தாயும் கோரம்பள்ளம் தனியார் பள்ளி ஆசிரியையுமான  பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து புதுக்கோட்டை நெடுஞ்சாலை காவல் சிறப்பு எஸ்.ஐ. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக கார் டிரைவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் சுந்தரம் மகன் பகவதி(54) என்பவர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors




Thoothukudi Business Directory