» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய பெருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய் 12, பிப்ரவரி 2019 3:24:44 PM (IST)



தென்னகத்துப்பதுவை என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்தில் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி செவ்வாய் கிழமையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அது போல இந்த ஆண்டும் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. 13 நாட்களும் காலை மற்றும் மாலையில் திருப்பலியும் நற்கருணை ஆசிரும் நடைபெற்றன. 

திருத்தலத்தின் பெருவிழா நாளாகிய இன்று காலை முதல் திருப்பலியானது தொடர்ந்து நடைபெற்றது. பெருவிழாத் திருப்பலியானது நண்பகல் 11.30 மணி அளவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான குருக்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை களைந்து பங்கேற்றனர். நேர்ச்சைக்காக மொட்டை போடுதல், நோயிலிருந்து சுகம் பெற வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துதல் மற்றும் கும்பிடுசேவை செய்தனர். 



13 முறை ஆலயத்தினை சுற்றி வந்து செபித்தல், புதுமைக்கிணற்றில் குளித்தல் மற்றும் புனித அந்தோனியாரிடம் குழந்தைகளை விற்று வாங்குதல் போன்றவை காலந்தோறும் இங்கு நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளாகும். இந்தத் திருவிழா நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான புனித அந்தோனியாரின் பக்தர்கள் கலந்து அந்தோனியாரின் ஆசிரைப் பெற்று சென்றார்கள். இந்த திருவிழா ஏற்பாடுகளை திருத்தலத்தின் பங்குத்தந்தை  மரிய பிரான்சிஸ், உதவிபங்குத்தந்தைகள் எட்வின் ஆரோக்கிய நாதன், சதிஷ் செல்வ தயாளன், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam

New Shape Tailors





Thoothukudi Business Directory