» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் ? தமிழக இளைஞர்கள் அச்சம்

செவ்வாய் 12, பிப்ரவரி 2019 12:52:27 PM (IST)

தமிழகத்தில் அஞ்சல்துறை, ரயில்வேதுறை, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய மத்தியஅரசு பணிகளில் வட மாநிலத்தவர்களே அதிக அளவு பணியமர்த்தப்படுவதால் தமிழக இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் கல்லுாரிகளில் படித்து முடித்து விட்டு வரும் இளைஞர்களின் முதல் தேர்வு, போட்டித்தேர்வுகள் எழுதி அரசாங்க பணிகளில் சேர்வதாக தான் உள்ளது. வங்கி, அஞ்சலகம், ரயில்வே என மத்தியஅரசு பணிகளுக்கும் இரவு, பகல் பாராமல் இளைஞர்கள் படித்து பல தேர்வுகளை எழுதி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் அஞ்சல்துறை, ரயில்வேதுறை உள்ளிட்ட முக்கிய மத்தியஅரசு பணிகளில் வட மாநிலத்தவர்களே அதிக அளவு பணியமர்த்தப்படுவதாகவும் இதனால் தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ என தமிழக இளைஞர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து அரசுத்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர் ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் ரயில்வேதுறை மற்றும் அஞ்சல் துறையில் 2014-ஆம் ஆண்டிலிருந்து வடமாநிலத்தவர்கள் தொடர்ச்சியாக அதிகாரிகளாகவும், அலுவலக ஊழியர்களாகவும் சேர்ந்து வருகின்றனர். ரயில்வேதுறை மற்றும் அஞ்சல் துறை பதிவுகளின் படி தமிழகத்தின் இந்த தலைமுறை பட்டதாரிகள் 40 வட மாநிலத்தவர்களுக்கு 5 என்ற விகிதத்தில் உள்ளனர். அதேபோல் அஞ்சல் துறையில் தமிழக கிராமங்களில் கூட இந்திக்காரர்கள் அஞ்சல் துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் சுமார் 500 ரயில்வே நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் வடமாநிலத்தவர்களே ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட முக்கிய பாெறுப்புகளில் உள்ளதாகவும், பிற பணிகளிலும் அவர்கள் 50 சதவித அளவுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது போல் தமிழகத்தில் பெரும்பாலான அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும் வட மாநிலத்தவர்களே பெரும்பாலும் பணிகளில் உள்ளனர்.

வங்கி, அஞ்சலகம், ரயில்வே ஆகிய இந்த மூன்று முக்கிய துறைகளையும் படித்தவர்கள், பலமொழி தெரிந்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும், தமிழ்மொழி மட்டுமே தெரிந்தவர்களும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறிருக்க தமிழ்மொழி தெரியாதவர்கள் பணியமர்த்தப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது சந்தேகங்கள், கேள்விகளை அவர்களிடம் கேட்டால் அவர்களுக்கு மொழி புரியாமல் தவிர்த்து விடுகின்றனர். இதனால் அங்கு வருபவர்கள் தனது சந்தேகங்களை யாரிடம் கேட்பது என தெரியாமல் தவிக்கும் சூழலும் உள்ளது.

லட்சக்கணக்கில் தமிழக இளைஞர்கள் படித்து விட்டு வேலை கிடைக்காமல், அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் இனியாவது தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் அவர்களின் நலனுக்கும், பொதுமக்களுக்கும் உபயோகமாக இருக்கும் எனவும் இது குறித்து தமிழகஅரசு, மத்தியஅரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ஜெய் சுகுமார்Feb 12, 2019 - 10:25:21 PM | Posted IP 162.1*****

நீங்க நல்லா cutout வச்சு பால் ஊத்துங்க. அப்புறம் உங்க வாய்ல பால்தான் விழும். தமிழினம் என்று உணர்ச்சி அடையும்?

ஒருவன்Feb 12, 2019 - 07:15:56 PM | Posted IP 141.1*****

அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் சில கலெக்டர்களும் வடை நாட்டவர் தான்

நிஹாFeb 12, 2019 - 01:02:11 PM | Posted IP 172.6*****

வடமாநிலத்தவர் எப்படி தேர்வெழுத்துவார்கள் என்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்தானே? தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest Cakes


Joseph Marketing


New Shape Tailors

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory