» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாராளுமன்ற தேர்தல் 2019 குறித்த ஆய்வுக்கூட்டம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 6:51:55 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 தேர்தல் முன்னேற்பாடுகள் - ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2019 முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் இன்று (11.02.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:- நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. 

எனவே, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகளை முழுமையாக சந்தேகத்துக்கு இடமின்றி வழங்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு தேவையான வாகன வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாகவும், அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் வழங்க மாவட்ட தகவல் மையம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு அறிக்கை அனுப்புதல் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், உதவி இயக்குநர் உமாசங்கர், தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications

New Shape TailorsJoseph MarketingThoothukudi Business Directory