» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு கட் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை

திங்கள் 11, பிப்ரவரி 2019 5:04:09 PM (IST)

தூத்துக்குடியில் குடிநீர் உறிஞ்ச மின் மோட்டார்களை பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராகவும் சிரமமின்றியும் பொதுமக்களுக்கு கிடைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகமானது துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஓரு நாள் விட்டு ஓரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் ஓரு நாள் விட்டு ஓரு நாள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதால் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிப்படைகிறது. மேலும் குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதிகளுக்கு (Tail End) குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 

இதனால் 09.02.19 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீடீர் ஆய்வு மேற்கொண்டதில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட 18 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட இதுபோன்ற தீடீர் ஆய்வுகள் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

jamesFeb 14, 2019 - 06:01:45 PM | Posted IP 162.1*****

சார் உங்க வீட்டுல எப்படி ?

முருகன்Feb 13, 2019 - 12:28:57 PM | Posted IP 172.6*****

இன்னும் முப்பது வருசத்துக்கு முன்னாடி உள்ளமாதிரி அறிக்கை விடாதீங்க ஆபிசர் மின் மோட்டார் காலத்தின் கட்டாயம் உங்களுடைய வினியோக முறையை துரிதபடுத்த குடிநீர் உபயோக முறை பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்துங்கள்

மோகன்Feb 13, 2019 - 11:46:54 AM | Posted IP 172.6*****

தண்ணீர் விடும் நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்துங்கள்

kumarfFeb 12, 2019 - 04:54:21 PM | Posted IP 162.1*****

சார் குறிஞ்சி நகர் ஏரியா முழுவதும் சாக்கடை தண்ணீர் தான் வருது 5 மாதம் நாங்கள் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் இல்லையே அலுவலர்கள் எல்லாம் தூங்கிட்டு இருக்காங்களா இல்ல வேற நாட்டுக்கு போய்ட்டாங்களா

NANBANFeb 12, 2019 - 11:57:54 AM | Posted IP 172.6*****

தண்ணீர் திறக்கும்போது மின்சார இணைப்பை நிறுத்தினாலே போதும் ...அனைவருக்கும் சீராக தண்ணீர் கிடைக்கும் ...

PalanivelFeb 12, 2019 - 11:37:18 AM | Posted IP 172.6*****

Kurinjinagar pipes are supplying only separate water(sakkadi)for last six months.What you are doing.

Palanivel.Feb 12, 2019 - 11:33:19 AM | Posted IP 162.1*****

Kurunjinagar pipelines are delivered only advantage water regularly. What you are doing?. பழனிவேல்

ராஜாFeb 12, 2019 - 11:06:33 AM | Posted IP 141.1*****

உங்கள வீட்டில் எப்படி ஆபீசர் தண்ணீர் எடுக்கிறீங்க?

தமிழ்ச்செல்வன்Feb 12, 2019 - 10:55:43 AM | Posted IP 141.1*****

இது நல்ல வரவேற்கத்தக்க திட்டம்தான். ஆனால் இதில் ஏழை பணக்காரன் பாகுபாடு வைத்து அதிகாரிகள் செயல்படுவதுதான் மிகுந்த வருத்தம். எனவே முதலில் பணக்காரர்கள் வீட்டில் மோட்டார்களை பறிமுதல் செய்து விட்டு அப்புறம் ஏழைகள் வீட்டில் கை வைக்கலாம். அப்படி செய்தால் அனைத்து மக்களும் இதை வரவேற்பார்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

ஒருவன்Feb 12, 2019 - 10:35:57 AM | Posted IP 141.1*****

அப்போ மின்சாரத்தை கட் பண்ணிட்டு தண்ணீரை வினியோகம் செய்யலாமே

தமிழ்Feb 11, 2019 - 11:51:31 PM | Posted IP 172.6*****

கம்பெனிகளுக்கு குடுக்காம இருந்தாலே தண்ணீர் சீரான விநியோகம் செய்யலாம்னே

ManikandanFeb 11, 2019 - 06:22:16 PM | Posted IP 141.1*****

முதல்ல மாநகராட்சில வேலை பார்க்கிறவங்க வீட்டை பரிசோதனை போடுங்க ஆப்பிஜர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory