» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி, 4 குழந்தைகளை தவிக்கவிட்டு கணவர் மாயம் : வறுமையில் தவிக்கும் குடும்பம் ஆட்சியரிடம் மனு

திங்கள் 11, பிப்ரவரி 2019 3:53:37 PM (IST)



சாத்தான்குளத்தில் மனைவி, 4 குழந்தைகளை தவிக்கவிட்டு தலைமறைவான ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பண்டாரபுரம், முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மனைவி இசக்கியம்மாள் என்பவர் தனது 4 குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : ஆட்டோ டிரைவரான எனது கணவருக்கும் எனக்கும் திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. எங்களுக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர். தற்போது எனது கணவர் எங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் நாகர்கோவிலைச் சேர்ந்த வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். ஏழ்மை சூழ்நிலையில் நான் எனது குழ்நதைகளை வளர்த்து வருகிறேன். 

எனது கணவர் அவ்வப்போது வந்து, மகளிர் குழு மற்றும் நகை அடமானம் வைத்து நான் வைத்திருந்த பணத்தையும் மிரட்டி பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். இதையடுத்து  ஒரு மாதத்திற்குள் வந்து கடனை அடைப்பதாக கூறினார். ஆனால் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார். எனவே, எனது கணவரை கண்டுபிடித்து தர காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மனுவை மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் அவர் அளித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes






Thoothukudi Business Directory