» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மகன் சிகிச்சைக்கு நிதியுதவி : தாயார் கோரிக்கை

திங்கள் 11, பிப்ரவரி 2019 3:39:36 PM (IST)

"தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த தனது மகனின் அறுவை சிகிச்சைக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்" என தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு கருணாநிதி நகரைச் சேர்ந்த பிரமசக்தி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி அன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் வேலைக்கு சென்றிருந்த எனது மகன் விஜயகுமார் (25), வலது காலில் குண்டு பாய்ந்து மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளான். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றான். 

பின்னர் அரசு உறுதியளித்ததின் பேரில் மதுரை மீனாட்சி மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், தொடை எலும்பு இன்னும் சேராததால மீண்டும் அறுவை கிசிச்சை செய்ய வேண்டியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களில் எனது மகன் மட்டும் இப்போது படுத்த படுக்கையாக உள்ளான். ஏற்கனவே கணவனை இழந்து நான் வறுமையில் தவிக்கிறேன். எனவே, எனது மகனின் சிகிச்சைக்கு அரசு உரிய உதவி வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest CakesAnbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory