» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டும்: அவசர சிகிச்சை நுட்பனர்கள் கோரிக்கை

திங்கள் 11, பிப்ரவரி 2019 3:26:03 PM (IST)அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டும் என அவசர சிகிச்சை நுட்பனர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

இது தொடர்பாக அவசர சிகிச்சை நுட்பனர்கள் சங்க மாநில பொதுச் செயலளார் லோகநாயகி, தூத்துக்குடியைச் சேர்ந்த சாந்தி பிரியதர்ஷினி மற்றும் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை நுட்பனர் என்ற படிப்பை நாங்கள் முறையாக படித்து பயிற்சியை முடித்துள்ளோம்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சுகாதாரத் துறையால் இந்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தூத்துக்குடி மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் முறையாக படித்து பயிற்சி பெற்ற எங்களைப் போன்ற பணி அனுபவம் உள்ள நுட்பனர்களை அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவில் பணியமர்த்த வேண்டும். 

ஆனால், பயிற்சி பெறாத 8ஆவது, 10வது படித்தவர்களை வைத்து இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் தகுந்த சிகிச்சை இன்றி பல உயிர்கள் பறிபோகிறது. கடந்த 2005 முதல் 2017 வரை இதுவரை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இப்பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். முறையாக பயிற்சி பெற்ற எங்களுக்கு இதுவரை ஒருவருக்கு கூட அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனையிலேயே எங்களுக்கு வேலையில்லை என்றால், தனியார் மருத்துவமனையிலும் எங்களை பணியமர்த்த மறுக்கிறார்கள். எனவே, அரசை நம்பி படித்த எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory