» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திங்கள் 11, பிப்ரவரி 2019 2:22:08 PM (IST)

தூத்துக்குடி பூபாலராயர்புரம், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம், திரேஸ்புரம், பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது எனவே அதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில்  அளிக்கப்பட்ட மனுவில்கூறப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பூபாலராயர்புரம் 3வது தெரு மக்கள் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் செயலாளர் பொன்னுவேல், தூத்துக்குடி மாவட்டஆட்சியர் (பொ) அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி பூபாலராயர்புரம், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம், திரேஸ்புரம், பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. 

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாநகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தாங்கள் ( மாவட்ட ஆட்சியர்) இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications

Joseph Marketing

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory