» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தர மறுத்ததால் உறவினருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது

திங்கள் 11, பிப்ரவரி 2019 11:00:58 AM (IST)

எட்டையபுரம் அருகே திருமணத்திற்கு பெண் தரமறுத்த விவகாரத்தில் அப்பெண்ணின் உறவினரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள காட்டுநாயக்கன்பட்டி, தெற்கு காலனியைச் சேர்ந்தவர் தங்கமாரியப்பன் மகன் கருத்தபாண்டி (20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தபெண்ணின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், அப்பெண்ணின் தாய்மாமாவான, ஈஸ்வரன் (42), பெண் கொடுக்க முடியாது என்று கூறினாராம். இதனால் அவர் மீது கருத்தப்பாண்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 

இந்நிலையில், வாட்ச்மேன் வேலைபார்த்து வரும் ஈஸ்வரன், நேற்று பணிக்கு சென்று திரும்பியபோது, கருத்தபாண்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரது வயிற்றில் சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எட்டையபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிவு செய்துள்ளார். தப்பியோடிய கருத்தப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

அருண்Feb 12, 2019 - 01:26:52 AM | Posted IP 141.1*****

இது கூட நியூஸ் இல்ல... அந்த பெண்ணும் இவனதான் கட்டுவேன்னு போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வந்து நிப்பா பாருங்க... அங்க இருக்கா நம்ம முட்டா தமிழச்சி...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education




Thoothukudi Business Directory