» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவர் கைது: குடிபோதையில் வெறிச் செயல்

திங்கள் 11, பிப்ரவரி 2019 9:09:01 AM (IST)

தூத்துக்குடியில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன்கள் சிவமுருகன் (41),  ஆபிரகாம் லிங்கன் (35).  இதில், சிவமுருகன் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள மய்யவாடியில் வெட்டியானாக உள்ளார். ஆபிரகாம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மய்யாவாடியில் சிவமுருகனும் ஆபிரகாமும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் அங்கிருந்த கட்டையை எடுத்து சிவமுருகனின் தலையில் பலமாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தை டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில், கொலை செய்து விட்டு தப்பியோடிய ஆபிரகாமை ஆபிரகாமை போலீசார் செய்தனர். தூத்துக்குடி மய்யவாடியில் அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதுவரை இங்கு 3 கொலைகள் நடந்துள்ளதாகவும், இதில் 2 கொலைகளில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

New Shape Tailors



Thoothukudi Business Directory