» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதல் மோகத்தில் நகை திருடுபோனதாக நாடகம்: மனைவி உட்பட 3பேர் கைது - பரபரப்பு தகவல்!!

திங்கள் 11, பிப்ரவரி 2019 8:07:14 AM (IST)

நாசரேத் அருகே கள்ளக்காதலனிடம் நகையை கொடுத்துவிட்டு, திருடுபோனதாக நாடகமாடிய மனைவி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(43). நாசரேத் சந்தி பஜாரில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலா (39). இவர்கள் இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், விமலாவுக்கும் முதலைமொழியைச் சேர்ந்த வெள்ளைமணி மகன் மோசஸ் (32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு விமலா, மோசஸிடம்  தனது 8 பவுன் தங்க நகையை அடகு வைக்க கொடுத்ததாக தெரிகிறது. 

இந்த விபரம் கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக விமலா நகையை திருப்புவதற்காக பாஸ்கரன் வீட்டில் வைத்திருந்த 2 லட்சத்து 6ஆயிரம் ரூபாயை அவருக்கு தெரியாமல் எடுத்து மோசஸிடம் கொடுத்து நகையை திருப்பச் சொன்னதாக தெரிகிறது. திருப்பிய நகையை மோசஸ் விமலாவின் நண்பர் ஆட்டோ டிரைவரான பிரகாசபுரத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் இஸ்ரவேலிடம் கொடுத்து விமலாவிடம் கொடுக்க சொல்லியுள்ளார். ஆனால் இஸ்ரவேல் நகையை விமலாவிடம் கொடுக்கவில்லை. 

நகை திரும்ப கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த விமலா, வீட்டில் இருந்த பணம் காணவில்லை என நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமலாவிடம் நீண்ட விசாரனைக்கு பின் பணம் திருடு போகவில்லை என்பதையும், கள்ளக்காதலனிடம் கொடுத்ததையும் ஒத்துக் கொண்டார். இதையடுத்து விமலா, மோசஸ், இஸ்ரவேல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 6.5 பவுண் தங்க நகையும், ரூபாய் 92 ஆயிரத்தையும் போலிசார் கைப்பற்றினர். இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 12, 2019 - 08:41:05 PM | Posted IP 141.1*****

ஊரே கெட்டு பொய் கெடக்கு. இதுல நற்செய்தி கூட்டம் ஒரு கேடா? அப்பிடின்னு அதனாலதான் அன்னைக்கு அப்படி கமெண்ட் போட்டேன். இது போல நம்ம ஊர்ல நெறைய கள்ள காதல் நடக்குது. நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு சர்வேயர் வீட்டுல இது போல நடந்துச்சு. ரெண்டு லேசா ரூபாய் பெறுமான நகை கள்ள காதலன் கிட்ட போயிடுச்சி. சர்வேயர் பொண்டாட்டி அந்த சத்துணவு அமைப்பாளர் மகன் அமெரிக்காவுல வேற இருக்கான். கடைசியில் SP வரைக்கும் போய் கையில கால்ல விழுந்து SP காவல் துறையில் பொய் கேஸ் கொடுத்ததால் ரெண்டு லட்சம் அபராதம் போட்டு அனுப்புனாரு. எப்படியோ ஊர் நாசமா போனா சரிதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Joseph Marketing

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory