» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போட்டியிட அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்பமனு

சனி 9, பிப்ரவரி 2019 11:31:31 AM (IST)



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு அளித்தார்.

பாராளுமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் தலைமைக் கழகத்தில் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். 

தூத்துக்குடி - நெல்லை ஆவின் சேர்மன் சின்னதுரை, அதிமுக நிர்வாகிகள் பிடிஆர் ராஜகோபால், மூர்த்தி, அரசகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தற்போதைய எம்பி ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜியின் மகனும், எஸ்பி சண்முகநாதனின் எம்எல்ஏவின் மகன் ராஜா, வழக்கறிஞர் செங்குட்டவன், சத்யா லெட்சுமணன், உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து 16பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory