» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் 9பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

சனி 9, பிப்ரவரி 2019 11:15:31 AM (IST)

தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி மோகனா (45), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வாகைகுளம் பஸ் ஸடாப்பிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டாடர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மோகனா, திருடன் திருடன் எனக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டனர். ஆனாலும், நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. மர்ம நபர்கள் பறித்துச் சென்ற நகையின் மதிப்பு சுமார் ரூ.2லட்சம் ஆகும். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


New Shape Tailors

Anbu Communications



Joseph Marketing

Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory