» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தை அடையாளம் தெரிந்தது

சனி 9, பிப்ரவரி 2019 8:33:46 AM (IST)கோவில்பட்டியில் கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தையின் பெற்றோர் குறித்து அடையாளம் தெரிந்தது. குழந்தை, தங்களுடையது எனக் கூறி, காவல் நிலையத்தில் தம்பதி மனு அளித்தது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் விட்டுச்செல்லப்பட்ட ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையை கிழக்கு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மீட்டனர். அந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், குழந்தையை யார் விட்டுச் சென்றனர் என்பது குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு வந்த விளாத்திகுளம் வள்ளிநாயகபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பரசுராமன் மகன் மகேந்திரன்(36), கோயிலில் மீட்கப்பட்ட குழந்தை தன் ஒன்றரை வயது மகன் கவின்குமார் என்றும், மனைவி சசிகலா(26) நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றதாகவும், பின்னர், மனைவியும், குழந்தையும் வீடு திரும்பவில்லை என்றும் கூறினார். அவரிடம், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், குழந்தைக்கான சான்றுடன், மனைவியை அழைத்து வருமாறு தெரிவித்தார். 

இந்நிலையில் திடீர் திருப்பமாக, தனது குழந்தையைக் காணவில்லை என அவரது மனைவி சசிகலா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் இருந்த குழந்தை கவின்குமாரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் சேவியர்ராஜ், சைல்டு லைன் உறுப்பினர் ராணி ஆகியோரிடம் குழந்தைகள் நல டாக்டர் ராமலட்சுமி ஒப்படைத்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தை கவின்குமாரை பெற்று செல்லுமாறு மகேந்திரன் தம்பதிக்கு அறிவுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Black Forest CakesAnbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory