» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் பூங்காவில் கடற்கரை சாகச விளையாட்டுகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்

சனி 2, பிப்ரவரி 2019 2:13:46 PM (IST)தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டுகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் தனியார் நிறுவனத்தின் மூலம் தண்ணீர் விளையாட்டுகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு தண்ணீர் விளையாட்டுகளை துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் , முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் . திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் ந.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகர பகுதியில் பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்துநகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டுகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, முத்துநகர் கடற்கரை பூங்காவில் Jet Ski, Wind Surfing, Banna Ride, Bump Ride, Stand Up Board ஆகிய கடற்கரை சாகச விளையாட்டுகள் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், Speed Boat, Family Boat Ride, Boat Ride, Snorkeling, Scuba Dive Sports Fishing போன்ற சாகச விளையாட்டுகள் படிப்படியாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படவுள்ளது. 

இதன்மூலம் தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் அதிக பொருட்செலவில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதற்கு மாறாக சிரமமின்றி குறைந்த செலவில் குடும்பத்துடன் குதூகலமாக பொழுதினை கழிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்ட மக்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் மற்றும் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையில் தண்ணீர் சாகச விளையாட்டுகள் அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக 

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 20 எண்ணம் இ - டாய்லெட் எனும் கழிப்பறை வசதி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இன்று தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் முதற்கட்டமாக 4 எண்ணம் இ - டாய்லெட் எனும் கழிப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இ டாய்லெட் கழிப்பறையானது முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் ஒரு நபர் கழிப்பறையினை பயன்படுத்தி பிறகு மேற்படி இ டாய்லெட்டில் தானியங்கி முறையில் 4 முறை முதல் 7 முறை வரை தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இ டாய்லெட் கழிப்பறைகளை பயன்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என பேசினார்.

ஆதனைத் தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில், சுமார் ரூ.10 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. விழிப்புணர்வு தகவல் விளம்பர திரையினை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் ராமச்சந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர் அமிர்தகணேசன், பி.டி.ஆர். ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 4, 2019 - 01:54:36 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் . மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மாநகராட்சி எடுக்க வேண்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Black Forest Cakes


Joseph Marketing


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory